Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

1.87 கோடி வேட்டி, சேலைகள் தமிழகத்திலேயே தயாரிப்பு: அமைச்சர்

1.87 கோடி வேட்டி, சேலைகள் தமிழகத்திலேயே தயாரிப்பு: அமைச்சர்

மொத்தம் 1.87 கோடி வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளி மாநிலத்திலிருந்து இலவச வேட்டி, சேலைகள் வாங்கவில்லை.

பகிரவும் WhatsApp Facebook

வேலூர் கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை, 585 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.63.30 கோடி வங்கி நிதி இணைப்பு , மாநகராட்சி திடக்கழிவு பணிக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் 25 மின்கல இயக்க வாகனங்கள் தொடங்கிவைத்தல் ஆகிய நிகழ்ச்சியில் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கைத்தறி கடைகளுக்கு அரசுப் பணத்தில் விளம்பரங்கள் செய்வதில்லை என்று கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பின்னலாடை நூலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு 12 மாதமும் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு 2 முறை மனு கொடுத்துள்ளோம். கைத்தறி நெசவாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் 60,000 பேர் பயனடைந்துள்ளனர். அடக்க விலை, அகவிலைப்படி தலா 10 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1.87 கோடி வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வெளி மாநிலத்திலிருந்து இலவச வேட்டி, சேலைகள் வாங்கவில்லை. இதற்கு முன்பு ஒரு கோடி இலவச வேட்டி, சேலை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

போலியான கைத்தறி சங்கங்கள் குறித்து சரக அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு புதிதாக 10 கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்கள் திறந்துள்ளோம். ஏற்கெனவே உள்ள கோ-ஆப்டெக்ஸ் ஷோரூம்களை மேம்படுத்தி உள்ளோம். மரபு ஆடை நாள் கடைபிடிக்கப்படுவதால், நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ், மாநகராட்சி ஆணையர் கேத்ரின் சரண்யா, நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி்.வி.சம்பத், எம்எல்ஏ-க்கள் வினோத் கண்ணன், சுதாகர், தென்றல் குமார், சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி
அவசர காலத்தில் அணு ஆயுதங்களை அனுமதிக்க ஜப்பான் பரிசீலனை
அடுத்த செய்தி
மீனவரை தாக்கி ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை

தொடர்புடைய செய்திகள்